விபத்தில் சிக்கிய குட்டி யானையை உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் உள்ள சந்தபூரி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டி யானை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த குட்டி யானை இதயம் செயலிழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்துள்ளது. ஆனால் பைக் ஓட்டுனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீட்பு பணியாளர் மனா ஸ்ரீவெட் என்பவர் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர் 26 வருடங்களாக […]
