கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி […]
