ரஷ்ய மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது 13,000 அடி உயரத்தில் மலையேற்ற வீரர்கள் ஆறு பேர் கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் குளுச்செவ்ஸ்கயா சோப்கா என்னும் மிகப்பெரிய எரிமலை ஒன்று அமைந்துள்ளது. 1584 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை யுரோசியாவின் மிக உயரமான எரிமலையாக விளங்குகிறது. மேலும் இது ரஷ்யா மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களிடம் புகழ்பெற்ற மலை சிகரமாகவும் இருக்கிறது. […]
