ஆசியாவில் உள்ள மீகாங் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட 224 விலங்குகளின் பட்டியல் உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் மீகாங் ஆற்றுப்படுகையில் தவளைகள், முதலை, கண்களை சுற்றி வெள்ளை நிறத்திலான வட்டமுடைய பேய் குரங்குகள், புதிய மூங்கில் இனங்கள் போன்றவை புதிதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வாழிடங்கள் அழிக்கப்படுவது, மனிதர்களால் ஏற்படும் நோய்கள் ஆகிய காரணத்தால் அதிகமான விலங்குகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் […]
