மிகவும் பிரபலமான, ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸின் ஃபுஷியா அன்னே ரவேனா வென்றுள்ளார். மிஸ் இன்டர்நேஷனல் குயின் என்னும் அழகி போட்டியானது திருநங்கைகளுக்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த இந்த அழகிப்போட்டி இந்த வருடம் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரத்தில் நடந்திருக்கிறது. இறுதி போட்டி, இன்று நடைபெற்றுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஃபுஷியா அன்னே ரவேனா பட்டம் வென்றிருக்கிறார். சுமார் 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் […]
