மியான்மரில் இன்று காலை 7.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியது, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலநடுக்கம் யாங்கூனில் இன்று 260 கி.மீ. சுற்றளவில் உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும்இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
