மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ராணுவத்தினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக மியான்மரில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபிடாவ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது […]
