மியான்மரில் ராணுவ படை வீரர்களின் தாக்குதலுக்கு ,ஒரே நாளில் சுமார் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியாகியது . மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தி ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக ,அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது ,அந்நாட்டு ராணுவ படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மண்டலே நகரை சேர்ந்த 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். […]
