தமிழகம் முழுவதும் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவதற்கும் கிளம்பி சென்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது. […]
