தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]
