புது மின்இணைப்பு பெறும்போது வசூலிக்கப்படும் பல்வகை கட்டணத்தை உயர்த்த மின் வாரியம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் ஒரு முனை, மும்முனை பிரிவுகளில் மின்இணைப்பு கேட்டு செலுத்தக்கூடிய கட்டணம் அடுத்த இருமாதங்களில் இரு மடங்கு உயர்த்தப்பட இருக்கிறது. வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை போன்ற பிரிவுகளில் புது மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை வழங்கும்போது பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர்காப்பீடு, வளர்ச்சிக்கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளிட்ட பல்வகை கட்டணமானது […]
