தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]
