மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் . […]
