மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்ததை அடுத்து அவரது உடலை கிணற்றில் வீசிய விவசாயியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோடேபாளையம் கிராம வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தோட்டத்தில் நட்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தை பவானிசாகர் அருகிலுள்ள குடில் நகரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து மிதப்பதாக […]
