சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]
