மின்சாரவாரிய அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் நடைபெற்றது. […]
