Categories
மாநில செய்திகள்

சென்னை: 2 வருஷத்தில் அனைத்து மயானங்களும் மின்மயானமாக மாற்றும் முயற்சி?…. மாநகராட்சி நடவடிக்கை…..!!!!

சென்னையில் அனைத்து மயானங்களையும் இரண்டு வருடங்களுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகமானது இறங்கி உள்ளது. சென்னையில் மாநகராட்சியின் வாயிலாக எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் இருக்கிறது. இதில் 49 மயானங்கள் நவீனமான முறையில் எரியூட்டும் அடிப்படையில் உள்ளது. மற்றவை விறகுகள் வாயிலாக எரியூட்டப்படும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் வாயிலாக சென்னை மாநகா் முழுவதும் பல பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்றாக மயானங்களும் நவீனமயமாக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

2023ஆம் ஆண்டுக்குள்….. “அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்”….. தென்னக ரயில்வே தகவல்….!!!!!

அனைத்து ரயில் பாதைகளும் விரைவில் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |