மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கீழராங்கியம் காலனியில் விவசாயியான கரந்தமலை(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மழை பெய்த நேரத்தில் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் கரந்தமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
