மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் முத்து தனக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்குள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெய்த கனமழையால் மின்னல் தாக்கி முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துவின் உறவினர்கள் அங்கு சென்றனர். […]
