மின்னல் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்குமார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரன்(14), நந்தகுமார்(12) என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதில் பவித்திரன் ஒன்பதாம் வகுப்பும், நந்தகுமார் ஏழாம் வகுப்பும் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியை முடித்து […]
