கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தி உள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கெளண்டே திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மின் வாகனங்கள் அல்லது மொபைல் போன்களை மையமாகக் கொண்டு மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா மேற்கொண்டு வருகின்றது. மேலும் வடக்கு கோவாவின் பெர்னெம் தாலுகாவில் உள்ள டீயுமில் மின்னணு உற்பத்தியில் மையம் அமைக்கும் பணிகளை அவர் […]
