மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாது எனவும் விவசாயத்திற்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோடைகாலம் நிலவிவரும் வேளையில் மின் உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது. இதனையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் […]
