இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
