மின்சார மோட்டரை இயக்க சென்ற கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழ்க்குடி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்சார மோட்டார் இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]
