சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சார பெட்டி வெடித்து சிதறியது. அதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். இதையடுத்து மணமக்களின் உறவினர்கள் மின்சார பெட்டியை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் மின்சார பெட்டியை சரி செய்யவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்த மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மூலக்கடை சாலையில் […]
