இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரித் தட்டுப்பாடு என்பது ஒரு பேசப்படும் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பல மாநிலங்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]
