மக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கின்றனர் . அதன்பின்னர் மக்காத குப்பைகளை சேகரிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு […]
