மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டப்பாடி கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை பார்ப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது மாணிக்கம் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் மிதித்துள்ளார். இதனையடுத்து மாணிக்கம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள் இது குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
