மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேர்பாக்கம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏழுமலை தன்னுடைய சொந்த நிலத்தில் வேலையை முடித்துவிட்டு மின்மோட்டார் பீஸ் கேரியரை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
