மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில் மண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான மண்ணப்பன் மலம் கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது செடி கொடிகளின் மீது அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் அதனை மண்ணப்பன் தொட்டுள்ளார். இதனால் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மண்ணப்பன் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மண்ணப்பனின் […]
