கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகி உள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அருகே இருக்கும் செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் விவசாயி. இவர் தினம்தோறும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள அவரின் தென்னந்தோப்புக்கு சென்று கீழே விழுந்திருக்கும் தேங்காய்களை சேகரித்து வருகின்ற நிலையில் நேற்று காலையும் சென்றிருக்கின்றார். அப்போது தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கிறது. அதை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டதால் மின்சாரம் அவரை தாக்கி இருக்கின்றது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரின் செல்போனுக்கு […]
