மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே இருக்கும் தனியார் குடோனுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம் மெத்தமலை தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ்(32) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடோன் வாசல் அருகே லாரியை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கண்டைனர் பெட்டி மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. […]
