கன்னங்குறிச்சி பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அருகில் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் டி.ராஜேந்திரன். இவர் மனைவி சந்தியா. ராஜேந்திரன் கடந்த ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் சந்தியா கட்டிட வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் உள்ள சுவற்றில் சாமி படங்கள் மற்றும் கணவரின் புகைப் படங்களுக்கு அலங்கார மின் விளக்குகள் மாட்டி வணங்கி […]
