மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கந்தசாமியின் மீது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
