மின்சாரம் தாக்கி இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள தாசம்பாளையம் குலத்து தோட்டத்தில் வசித்து வருபவர் கந்தசாமி. இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் ஹாங்காங்கில்லுள்ள தனியார் கப்பல் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுமுறையின் காரணமாக விக்னேஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் விக்னேஷ் பயிர் வகைகளுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு அவருடைய தோட்டத்திற்கு […]
