மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக […]
