மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பண்ணா வலசு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 6 வயதில் அறிவழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த மின் சுவிட்சை அறிவழகன் போட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவழகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]
