மின்கம்பி தீப்பிடித்து எரிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் சாரதாம்பாள் தனது பேரன் பேத்திகளுடன் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மேலுள்ள மின்கம்பியானது திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட சாரதாம்பாள் தனது பேரன்,பேத்திகளை வீட்டுக்குள் போகும்படி கூறியுள்ளார். அதன்பின் அறுந்து விழுந்த மின் கம்பி சாரதாம்பாள் […]
