தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு பாதிப்படைந்தது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்த இலவ மரம் தொடர் மழை காரணமாக நேற்று காலை 8 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் ரயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லும் ரயில் போக்குவரத்து சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த திருவள்ளூர் […]
