பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் பிழைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்த ஜெயின்(25) என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரியில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வந்தார். இந்த மினி லாரி திருக்கோவிலிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. […]
