இந்திய அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பையில் வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாராகி வருகிறது. இருப்பினும் இந்திய அணியில் ஓபனருக்கான இடத்தில் அதிக போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் உள்ளிட்டோர் ஓபனருக்கான போட்டியில் உள்ளனர். அதில் மிடில் வரிசையில் விளையாடக் கூடியவர் ராகுல் மட்டுமே. அதாவது மிடில் வரிசையில் களமிறங்கிய போது தான் ராகுல் அதிக ரன்களை குவித்துள்ளார். […]
