கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். […]
