பிரான்சில் கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை மிச்சப்படுத்த முடியும். மேலும் உரிய நேரத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருவதால் பிரான்சின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்க்கும் சக்தி உருவாகி இருக்கும். […]
