இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு அருகில் கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது 8 அடி நீளத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் அது இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு என்பதை கண்டறிந்தனர். […]
