மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. தொடர்ந்து, மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
