Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ பயன்படுத்த வேண்டாம்… கர்சீஃப் யூஸ் பண்ணுங்க… விஜய் தேவரகொண்டா அறிவுரை!

நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

12,000 போலி N95 மாஸ்க்குகள் பறிமுதல்… குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் சானிடைசர்கள், முகக்கவசங்கள் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருளாக இருக்கிறது. இதனால் முகக்கவங்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் ‘மாஸ்க்’ தயாரிக்கும் கைதிகள்… குவியும் பாராட்டுக்கள்!

பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க், சானிடைசர்களை அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு – இனி அதிக விலைக்கு விற்க முடியாது!

கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முக கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முகமூடி (மாஸ்க்), கையுறை (க்ளவுஸ்) மற்றும் கைச்சுத்திகரிப்பான் (சானிட்டைஸர்) […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… கைதிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்!

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]

Categories

Tech |