முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி போன்ற பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு […]
