சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் பொங்கல் பூவை பொதுமக்கள் பலர் எடுத்துச்சென்று மகிழ்கின்றனர். பொங்கல் திருநாள் ஒரு மங்கலமான நாள் ஆகும். பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் கோலமிட்டு சூரிய பகவானுக்கு வாழைப்பழம், கரும்பு, இலை, மஞ்சள் குலை, வெற்றிலை-பாக்கு புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனைப் பூக்கள் என இப்படி ஏராளமான மங்கலமான பொருட்கள் வைத்து பொங்கலின் போது வணங்குவார்கள். இதில் பொங்கல் பூவும் மிக முக்கியமானது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் […]
