தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் […]
