சேலம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
